அண்மைய செய்திகள்

recent
-

ஆட்டோவில் ஏறும் பெண்களுக்கு ஓரு எச்சரிக்கை .. சிங்கள சகோதரியின் பதிவில் இருந்து ...

ஒரு சிங்கள சகோதரியின் பதிவில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது........ கொஸ்வத்த பிரதேசத்தில் வீட்டை நோக்கிப் புறப்பட முச்சக்கர வண்டியொன்றில் ஏறினேன். சென்று கொண்டிருக்கையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர் வண்டியில் பொருத்தப்பட்டிருந்த உட்பக்க கண்ணாடியை சரி செய்ததை கண்டேன். 

 (முதல் போட்டோ) எனது கீழ் பக்கம் தெரியுமாறு சரி செய்தார். சிறிது நேரம் கழித்து தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டேன் : “ஹெலோ மாமா, பொலிஸிலா இருக்கின்றீர்கள்? அங்கு தான் வந்து கொண்டிருக்கிறேன். முச்சக்கர வண்டி ஓட்டுநர் (பரபரப்பான தொனியில்) : ஏன் மிஸ், ஏதாச்சும் பிரச்சினையா? நான் : ஆம் பிரச்சினை தான், இலங்கையில் பொறுக்கிகள் அதிகமாகிட்டாங்க. அமைதி..... சிறிது நேரம் கழித்து உட்பக்க கண்ணாடி மீண்டும் சரி செய்யப்பட்டது. (இரண்டாம் போட்டோ) முச்சக்கர வண்டி ஓட்டுநர் : மிஸ் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டாம். நான் குடும்பஸ்தன். நான் : முன்னாடி நிறுத்துங்கள். குடும்பமும், பிள்ளைக்குட்டிகளும் நினைவுக்கு வருவது, சிறைச்சாலை பற்றி நினைத்தும் பார்க்கும் போதா? தனது கெட்ட எண்ணத்திற்கு முச்சக்கர வண்டியில் செல்லும் பெண்களா தீனீ? அரைவாசி கூலியை கொடுத்துவிட்டு வண்டியை விட்டு இறங்கினேன். 

 பெண்களே, சிறுமிகளே, சகோதரிகளே மற்றும் யாரெல்லாம் இதை காண்கிறீர்களோ, இப்பதிவு என்னை பற்றி பெருமை பேசிக்கொள்வதற்காகவல்ல. இது போன்ற சூழ் நிலைகளில் உங்களை எப்படி நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான். இவ்வாறானாவர்களுக்கு பதிலடி கொடுங்கள். போலி தொலைப்பேசி அழைப்பினையாவது எடுங்கள், வாகன இலக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் செய்யும் குற்றத்தை உணர வையுங்கள். தனியாக பயணிக்கும் போது இவ்வாறான சூழ் நிலைகளில் தைரியமாக இருக்க வேண்டும். போலி தொலைப்பேசி அழைப்பாவது எடுத்து அவர்களை மடக்குங்கள் 

ஆட்டோவில் ஏறும் பெண்களுக்கு ஓரு எச்சரிக்கை .. சிங்கள சகோதரியின் பதிவில் இருந்து ... Reviewed by Author on April 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.