அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 2578 ஏக்கர் சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை.

மன்னார் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பான கலந்துiராடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(27) காலை 10.30 மணிக்கு மன்னார் உயிலங்குளம் விவசாய மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. 

 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பிரதேசச் செயலாளர்கள்,நீர்பாசன திணைக்களம்,விவசாய திணைக்களம்,விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர். -குறிப்பாக இலங்கையிலே மன்னார் மாவட்டத்தில் சிறு போக பயிர்ச் செய்கை புலவுகளின் கீழ் செய்யும் நடைமுறை காணப்படுகின்றது. 

 அதன் அடிப்படையில் இம்முறையும் நெற்பயிர்ச் செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்ற லோசனைகள் குறித்த கூட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய 11 ஆம் , 12 ஆம், 13 ஆம் கட்டை பிரதான வாய்க்கால்கள்,அடைக்கல மோட்டை பிரதான வாய்க்கால்,சின்ன உடைப்பு பிரதான வாய்க்கால்,பெரிய உடைப்பு பிரதான வாய்க்கால் என்பவற்றின் ஊடாக 2578 ஏக்கரில் இம் முறை நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. -மேலதிகமாக குருவில் வான் வாய்க்கால் ஊடாக 400 ஏக்கர் மேட்டு நில பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டள்ளது. -இதற்கான சகல உற வினியோகங்கள்,விதை நெல் வினியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 மேலும் அடாத்து பயிர்ச் செய்கை தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. -அடாத்து பயிர் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கால் நடை கட்டுப்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,கால்நடை வளர்ப்பாளர்களினால் கால்நடைகளின் கட்டுப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளாத பட்சத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்வது என குறித்த கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.









மன்னார் மாவட்டத்தில் 2578 ஏக்கர் சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை. Reviewed by Author on April 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.