இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் உள்ளதாக மீண்டும் உறுதி!
மூன்று தனியார் நிறுவனங்களால் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பரிசோதனையில் முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் குறித்த நிறுவனங்களுக்கு சொந்தமான கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன்படி, அதன் முடிவுகள் நேற்று நுகர்வோர் விவகார சபைக்கு கிடைக்கப்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவத்த தெரிவித்தார்.
இறக்குமதி தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் வேதிப்பொருள் உள்ளதாக மீண்டும் உறுதி!
Reviewed by Author
on
April 02, 2021
Rating:

No comments:
Post a Comment