நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் கோர விபத்து: மூன்று பெண்கள் உயிரிழப்பு
விபத்தில் முச்சகரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை – எல்ல பகுதியைச் சேர்ந்த 18, 51 மற்றும் 52 வயதான மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பாரிய வளைவொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி, கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டி மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் கோர விபத்து: மூன்று பெண்கள் உயிரிழப்பு
Reviewed by Author
on
April 01, 2021
Rating:

No comments:
Post a Comment