அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் பெருமை சொல்லும் “மன்னல்” நூலுக்கான ஆக்கங்கள் சேகரிப்பு

மன்னார் பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான கலாசார விழா ஜூன் மாதம் இடம் பெறவுள்ள நிலையில் ஆண்டு தோறும் மன்னார் மாவட்டத்தின் சிறப்பை எடுத்துறைக்கும் விதமாக உருவாக்கப்படும் “மன்னல்” பிரதேச மலர் இம்முறையும் சிறப்பாக வெளியிடப்படவுள்ளது. 

 இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கலைஞர்கள் ,எழுத்தாளர்கள் ,மற்றும் சமூக ஆர்வளர்களின் ஆக்கங்கள் மன்னல் மலரில் வெளியீடு செய்வதற்காக கோரப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் சிறப்பையும் கலாசார பண்பாட்டு அம்சங்களையும் எடுத்து கூறக்கூடிய ஆக்கங்களாகவும் ,நடு நிலை தன்மை உடையதாகவும் அமைதல் வேண்டும்.

 ஆக்கங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார் பிரதேச செயலகத்தில் நேரடியாகவோ அல்லது கலாசார உத்தியோகஸ்தர் , பிரதேச செயலகம் , மன்னார் எனும் முகவரிக்கோ அல்லது abimahathy18@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது . மேற்படி அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள் பிரதேச மலர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு மன்னல் நூலில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னாரின் பெருமை சொல்லும் “மன்னல்” நூலுக்கான ஆக்கங்கள் சேகரிப்பு Reviewed by Author on April 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.