அண்மைய செய்திகள்

recent
-

உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பரபரப்பு சம்பவம்..!

உயிரிழந்ததாக தெரிவித்து, பிரேத அறைக்கு அனுப்பப்பட்ட நபரொருவர், உயிருடன் இருந்த சம்பவமொன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. மீனவ சமூகத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவரினால் உறுதிப்படுத்தியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த நபரின் சடலம் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபரின் சடலத்தை பார்வையிடுவதற்காக, அவரது குடும்பத்தார் பிரேத அறைக்கு சென்ற வேளையில் அவர் உயிருடன் உள்ளதை, உறவினர்கள் அவதானித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, குறித்த நபர் மீண்டும் வாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரின் உடலில் சீனியின் அளவு குறைவடைந்தமையினால், அவர் சுயநினைவை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்திய வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரபல இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பரபரப்பு சம்பவம்..! Reviewed by Author on April 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.