அண்மைய செய்திகள்

recent
-

வீட்டில் இருந்து சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் இந்த தேர்தலில் திரை மற்றும் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் மாஸ்க் அணிந்தும் வரிசையில் நின்றும் ஓட்டு போட்டு வருகின்றனர். முன்னதாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

 இதேபோல் தந்தை சிவகுமாருடன் வந்த சூர்யா, கார்த்தி ஆகியோரும் வாக்களித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்தை பொருத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு வந்து வாக்களித்துச் சென்றார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தமது மகள்கள் ஸ்ருதி ஹாசன் , அக்‌ஷரா ஹாசனுடன் வந்து வாக்களித்தார்

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார். தமது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்த விஜய் மாஸ்க் அணிந்து வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார். இதனிடையே தம் வீட்டில் இருந்து விஜய் எவ்வாறு சைக்கிளில் ஓட்டுப் போடுவதற்காக புறப்பட்டார் என்கிற வீடியோவும் வெளியாகியுள்ளது.


வீட்டில் இருந்து சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் Reviewed by Author on April 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.