இந்தியாவில் 2 இலட்சம் பேர் கொரோனாவுக்கு பலி
அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 76,085 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 149,313,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் உலகம் முழுவதும் 3,148,012 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 127,451,058 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 51,249 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மேலும் 871 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக வருகிறது. அங்கு ஒரே நாளில் 76,085 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,120 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இங்கிலாந்தில் 2,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்சில் 30,317 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 10,404 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 373 பேர் இறந்துள்ளனர்.
ரஷ்யாவில் புதிதாக 8,053 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 392 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 354 பேர் உயிரிழந்துள்ளனர்.துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 43,301 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 346 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 2 இலட்சம் பேர் கொரோனாவுக்கு பலி
Reviewed by Author
on
April 28, 2021
Rating:
Reviewed by Author
on
April 28, 2021
Rating:


No comments:
Post a Comment