இலங்கையில் புதிய உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்!
இதற்கமைய, பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், திவுலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், அனுராதபுரம் 64 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பரகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,636 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 530 பேர் இன்று (30) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் புதிய உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்!
Reviewed by Author
on
May 01, 2021
Rating:

No comments:
Post a Comment