திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் மாயம்- தேடும் பணி தீவிரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலுக்கு சென்ற விஜேந்திரன் சஞ்சீவன் (21 வயது), ஜீவரெட்ணம் சரன்ராஜ்( 34 வயது), சிவசுப்ரமணியம் நதுசன் (21 வயது), ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏனைய மீனவர்கள், அவர்களை தேடும் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து முடக்கப்பட்டமையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த அவர்கள், கடல் தொழிலுக்கு சென்றுள்ளனர் என ஏனைய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் மாயம்- தேடும் பணி தீவிரம்
Reviewed by Author
on
May 25, 2021
Rating:
Reviewed by Author
on
May 25, 2021
Rating:



No comments:
Post a Comment