மன்னார் இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் மயங்கி விழுந்து இளம் குடும்பஸ்தர் மரணம்.
குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) மாலை இலுப்பைக்கடவை படகு துறை கடற்கரை பகுதியில் மீன் வலை துப்பரவு செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி வீழ்ந்துள்ளார்.
-உடனடியாக அவரை அவசர அம்புலான்ஸ் வண்டி ஊடாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
-எனினும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த நபரின் திடீர் மரணத்திற்கான காரணம் இது வரை தெரிய வரவில்லை.
மன்னார் இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் மயங்கி விழுந்து இளம் குடும்பஸ்தர் மரணம்.
Reviewed by Author
on
May 31, 2021
Rating:
Reviewed by Author
on
May 31, 2021
Rating:



No comments:
Post a Comment