மன்னாரில் அமைக்கப்பட்ட ஆண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு நாளாந்த சுகாதாரப் பொருட்கள் கையளிப்பு.
குறித்த நிலையத்தில் சிகிச்சை பெற உள்ள நோயாளிகளுக்கான ஒரு தொகை நாளாந்த சுகாதாரப் பொருட்கள் மன்னார் மாவட்ட செயலாளரின் வேண்டு கோளுக்கு அமைவாக மன்னாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமை செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 10.30 மணியளவில் குறித்த நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.திலிபன் அவர்களினால் மாவட்ட செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரி திருமதி ஏ. ஸரான்லி டிமெலிடம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரெட்னம் திலிபன் மற்றும் போரம் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அருந்தவராஜா நிரோஜன் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களும் இணைந்து குறித்த பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அமைக்கப்பட்ட ஆண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு நாளாந்த சுகாதாரப் பொருட்கள் கையளிப்பு.
Reviewed by Author
on
May 18, 2021
Rating:
Reviewed by Author
on
May 18, 2021
Rating:






No comments:
Post a Comment