அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் நினைவு கூரப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

 இதன்போது அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் ஆலயத்தின் பிரதம குருவான பிரபாகரக் குருக்களினால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டன. குறித்த நிகழ்வில் உறவுகளை இழந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை குறித்த பகுதியில் கடைமையில் இருந்த பொலிஸார், அங்கு வருகை தந்தவர்களின் அடையாள அட்டையை பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



வவுனியாவில் நினைவு கூரப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு Reviewed by Author on May 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.