அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் மாணவிக்கு முத்தம் கொடுத்த தமிழ் பேராசிரியர் ஹரி தனபாலன்!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை

நான் உன்னுடன் வருகிறேன் எனக்கு முத்தம் கொடு, என்று மாணவியின் உதட்டை கடித்துள்ளார் பேரசிரியர் தனபாலன். அன்றைய தினம் அவர் கடும் மது போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வேல்ஸின் Treforestல் உள்ள இரயில் நிலையம் நோக்கி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அவரை மது போதையில் தனபாலன் பின் தொடர்ந்திருக்கிறார். அந்த மாணவி தனபாலனிடம் பயிலவில்லை மற்றும் அவர் பணியாற்றிய பல்கலைக்கழத்திலும் படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Source: BBC : University lecturer jailed for sex assault on student. பின்னர் மாணவி உடலின் மீது மோசமாக கை வைத்த தனபாலன் தொடர்ந்து அவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த செயலை நிறுத்துமாறு இளம்பெண்ணான அந்த மாணவி கெஞ்சி கேட்டும் தனபாலன் நிறுத்தவில்லை. 

மேலும், நீ என் இதயத்தை உடைக்கிறாய் என மோசமாக பேசி தொட்டிருக்கிறார்.இதனால் பயந்து போன மாணவி அங்கிருந்து ஓட தொடங்கிய போது விடாமல் துரத்திய தனபாலன், நான் உன்னை பின் தொடரவில்லை, நான் உன்னுடன் வீட்டுக்கு வருகிறேன், நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என கூறினார், என்று மாணவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த மாணவி தனது நண்பருக்கு போன் செய்து வர சொன்னார். பின்னர் மீண்டும் அவர் ஓட முயன்ற போது தடுத்த தனபாலன், ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நீ இங்கிருந்து செல் என கூறியிருக்கிறார்.அந்த சமயத்தில் மாணவியின் நண்பர் அங்கு வந்துவிட தனபாலன் அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார். 

 இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தனபாலனின் டி என் ஏவை வைத்து விசாரித்ததில் அவர் மாணவி கன்னத்தில் முத்தம் கொடுத்தது உறுதியானது.இதை தொடர்ந்து தனபாலனை பொலிசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் முடிவே நேற்று முன் தினம் வெளியாகியுள்ளது. இதில் இவருக்கு 2 வருட சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. இதனை அடுத்து பேராசிரியர் பதவியையும் அவர் இழந்துள்ளார் .

-நன்றி BBC News


லண்டனில் மாணவிக்கு முத்தம் கொடுத்த தமிழ் பேராசிரியர் ஹரி தனபாலன்!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை Reviewed by Author on May 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.