மட்டக்களப்பில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
இந்நிலையில் இன்று வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்றவர்களால் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடந்த 27 ம் திகதி காணாமல்போன செங்கலடியைச் சேர்ந்தவர் என கண்டறிந்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
Reviewed by Author
on
May 09, 2021
Rating:

No comments:
Post a Comment