கொட்டகலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
வேன் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டகலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
Reviewed by Author
on
May 02, 2021
Rating:

No comments:
Post a Comment