சுகாதார நடைமுறைகளிற்கு ஒத்துழைக்காத உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது – ஐவர் கைது
வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பிசிஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்கும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருமாறு கடந்த இரு தினங்களிற்கு முன்பாக பணிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த உணவகத்தில் பணிபுரியும் சிலர் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) சுகாதார பரிசோதகர்களால் குறித்த உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது.
இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கச்சென்ற சுகாதார பரிசோதகர்களுடன் குறித்த உணவகத்தின் ஊழியர்கள் சிலர் முரண்பட்டிருந்தனர்.
இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து ஐந்து பேர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார நடைமுறைகளிற்கு ஒத்துழைக்காத உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது – ஐவர் கைது
Reviewed by Author
on
May 02, 2021
Rating:

No comments:
Post a Comment