மன்னாரில் இயற்கை முறையிலான பசளை தயாரிப்பு,மற்றும் தோட்ட செய்கையை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வை.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய பணிப்பாளர் , மன்னார் நகர சபையின் செயலாளர்,மாவட்ட விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
முதலில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கும் இயற்கை பசளை தயாரிப்பு முறைகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு கூட்டுப்பகளை தாயரிக்கப்பட்டு வருகின்றது.
மாதம் 8 ஆயிரம் கிலோ இயற்கை பசளை தாயரிப்பதோடு,விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த பசளையை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதோடு, குறித்த பசளையின் சரியான தரத்தினை பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.
குறித்த பசளையில் குறைபாடுகள் எவையும் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்து தரமான பசளையை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும்,ஏனைய மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மன்னார் கரிசல் பகுதியில் இயற்கை முறையிலான பசளையை பயண்படுத்தி மேற்கொள்ளப்படும் தோட்டச் செய்கையையும் அரசாங்க அதிபர் சேரடியாக சென்று பார்வையிட்டார்.
மன்னாரில் இயற்கை முறையிலான பசளை தயாரிப்பு,மற்றும் தோட்ட செய்கையை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வை.
Reviewed by Author
on
June 09, 2021
Rating:

No comments:
Post a Comment