மன்னார்- கள்ளியடியில் அரசகாணிகளை ஆடார்த்தாக அபகரிக்கும் கிராம அலுவரும் டெலோ இளைஞர் அணி செயலாளரும் ; பிரதேச செயலாளரும் உடந்தை ..
மன்னார் மாந்தை மேற்கு கள்ளியடியில் அரசகாணிகளை ஆடார்த்தாக அபகரிக்கும் கிராம அலுவரும் டெலோ இளைஞர் அணி செயலாளரும் ; பிரதேச செயலாளரும் உடந்தை ..
மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவில் உள்ள அதிகாளவான அரச காணிகள் பிரதேச செயலாளரின் உதவியுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அடாத்தாக வழங்கப்படுவதாக மாந்தை பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
குறித்த பகுதியில் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு என 2013 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகள் வனவளதிணைக்களத்தினால் எல்லை இடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் மக்களின் தேவைக்காக விடுவிக்கப்பட்டிருந்தது
பொருளாதார நிலை மற்றும் கொரோனா பிரச்சினை காரணமாக மக்கள் காணிகளை துப்பரவு செய்யாத நிலையில் மாந்தை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு வார காலத்திற்கு மேலாக மக்களின் காணிகளை துப்பரவு செய்ததுடன் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்களால் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயளாலருக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில்...
அதே நேரம் குறித்த பிரச்சினை சம்மந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயளாலருக்கு தெரியப்படுத்தி விரைவில் மக்களின் காணிகளை விடுவித்து வழங்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்
25/06/2021
மன்னார்- கள்ளியடியில் அரசகாணிகளை ஆடார்த்தாக அபகரிக்கும் கிராம அலுவரும் டெலோ இளைஞர் அணி செயலாளரும் ; பிரதேச செயலாளரும் உடந்தை ..
Reviewed by NEWMANNAR
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment