கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி; அதிரடி நடவடிக்கை
ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது, வியாபாரி ஒருவர் ஒரு கிலோ கேரட்டை 3,500ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த வியாபாரிக்கு, எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Reviewed by Vijithan
on
December 03, 2025
Rating:


No comments:
Post a Comment