260 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொரோனா நிவாரணம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர்.
எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்.
எனக்கு வாக்களித்த 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகும். "
"கொவிட் பரவலை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடு விதித்து, சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு எவ்வளவு அறிவுறுத்தப்பட்டாலும், சில பொது மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
பல புதிய செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டியிருந்தது.
கொரோனா காரணமாக அரசாங்கம் பல கூடுதல் செலவுகளைச் செய்கிறது.
கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளது.
கொரோனா செலவினம் திட்டமிடப்பட்ட நிவாரணங்களுடன் சேர்க்கப்படும் போது, இது கடந்த ஆண்டு நாட்டின் மொத்த அரசாங்க வருவாயான 1,380 பில்லியன் ரூபாயில் பாதி ஆகும். "
கொழும்பு துறைமுக நகரத்தின் புதிதாக சேர்க்கப்பட்ட 269 ஹெக்டேருக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு தற்போது எழுந்துள்ளது.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, 100% இலங்கையர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை நியமித்தேன்.
முதலாவது முதலீடாக 400 மில்லியன் டொலர் முதலீட்டில் இரண்டு கோபுரங்களுடன் கூடிய வர்த்தக கட்டிடத்திற்கு அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற நிதிக் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ”
"நாங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வளர முடியும்."
"ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது எனக்கு ஆதரவளித்த பலர், நாட்டிற்கு முதலிடம் கொடுக்கும் ஒரு தலைமையை என்னிடம் கோரினர்.
ஆனால் நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தனிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததற்காக சிலர் அரசாங்கத்தின் மீது கோபமடைந்தனர்.
அவர்கள் இப்போது அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் நான் விரும்புவது ஒரு சிலரைப் பிரியப்படுத்த எனது கொள்கைகளை மாற்றுவதல்ல, மாறாக நான் உறுதியளித்த சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தினை செயல்படுத்துவதாகும்.
அறிவார்ந்த மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். " என்றார்.
260 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொரோனா நிவாரணம் - ஜனாதிபதி தெரிவிப்பு!
Reviewed by Author
on
June 26, 2021
Rating:
Reviewed by Author
on
June 26, 2021
Rating:


No comments:
Post a Comment