முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 582 பேருக்கு தடுப்பூசி!
முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த தடுப்பூசிகள் மாவட்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் ஊடாக ஆடைத்தொழிற்சாலையில் வைத்து ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு உதவிய நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவினர் மற்றும் ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக தங்களது ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றிய பின்னர் அச்சத்தோடு பணியாற்றி வந்த போதும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுவது தமக்கு ஒரு ஆறுதலாக இருப்பதாகவும் இச் செயற்பாட்டினால் தங்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகமும் அச்சமற்ற ஒரு நிலைமையில் வாழ வழிவகுக்கும் எனவும் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 582 பேருக்கு தடுப்பூசி!
Reviewed by Author
on
June 25, 2021
Rating:
Reviewed by Author
on
June 25, 2021
Rating:




No comments:
Post a Comment