அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு கடலில் அனுமதியின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் கைது 3 இயந்திரப்படகுகள் மீட்பு

மட்டக்களப்பில் இருந்து அனுமதியின்றி ஆழ்கடலில் இயந்திரப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 பேரை நேற்று திங்கட்கிழமை (14) இரவு கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளதுடன் மீட்கப்பட்ட 3 இயந்திரப்படகுகளையும் கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.கடற்படையினர் வழமைபோல கடலில் சம்பவதினமான நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு; கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமாக கடலில்; இயந்திரப்படகுகள் பிரயாணித்ததை அவதானித்த கடற்படையினர் பின் தொடர்ந்து இயந்திரபடகுகளை வழிமறித்து சோதனையிட்டனர்.

இதன்போது அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை கைது செய்ததுடன் அவர்களின் 3 இயந்திரப்படகுகளையும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டுவந்தனர்.இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்வுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்

மட்டக்களப்பு கடலில் அனுமதியின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் கைது 3 இயந்திரப்படகுகள் மீட்பு Reviewed by Author on June 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.