அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பகுதியில் வைத்து 672 கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு.

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர். மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக நாட்டக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது. 

 குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் 3 மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த பொருட்கள் இன்று வியாழக்கிழமை (8) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மன்னார் பகுதியில் வைத்து 672 கிலோ உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு. Reviewed by Author on July 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.