கன மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
இதன் காரணமாக, ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தெஹியோவிட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு
Reviewed by Author
on
July 10, 2021
Rating:

No comments:
Post a Comment