மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பைசர் (Pfizer ) தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு.
குறிப்பாக இன்றைய தினம் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த வங்காலை, அச்சங்குளம்,நறுவலிக்குளம், வஞ்சியம்குளம் கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி றூபன் லெம்பேர்ட் தலைமையில் வங்காலை புனித ஆனால் ஆலயத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றது
அதே நேரம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வைத்திய அதிகாரி ஒஸ்மன் டெனி தலைமையில் அரிப்பு,சிலாவத்துறை,முத்தரிப்புதுறை பகுதிகளை சேர்ந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன
மன்னார் மாவட்டத்திற்கு என 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, உற்பட சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்
அதிகளவான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பைசர் (Pfizer ) தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு.
Reviewed by Author
on
July 10, 2021
Rating:

No comments:
Post a Comment