மன்னார் வைத்தியசாலைக்கு 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக 19 லட்சத்து முப்பத்து ஐயாயிரம் ரூபாய் (1935000.00) பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் ஒட்சிசன் செரிவூட்டிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜ மற்றும் அரசாங்க அதிபரிடம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கையளித்தார்.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவபாலன் குணபாலன் வைத்தியசாலை திட்டமிடல் பிரிவு வைத்தியர் S.A ஜோகேஸ்வரன் பிராந்திய வைத்திய பல் வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட சுகாதார தரப்படுத்தல் வைத்தியர் சிறி தேவி வேதவனம் வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதே நேரம் குறித்த நிறுவனத்தினால் கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு என 21 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன் 20 லட்சம் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வைத்தியசாலைக்கு 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.
Reviewed by Author
on
August 03, 2021
Rating:
Reviewed by Author
on
August 03, 2021
Rating:


No comments:
Post a Comment