அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுனார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 10,030 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 இவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, நீர் தேங்கியுள்ள இடங்களில் நுளம்பு குடம்பிகளை அடையாளம் காண்பதற்காக இரண்டு பொலிஸ் மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. டெங்கு ஒழிப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மோப்ப நாய்களை பயன்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் Reviewed by Author on August 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.