ஒக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; அபாய நிலை காணப்படுகிறது – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
தற்போது காணப்படும் வசதிகளுக்கு மேலதிகமான COVID நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முன்னுரிமை தேவைக்கு அமைய அபாய நிலையை கருத்திற்கொண்டு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் ஏனையவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய COVID நிலையை கருத்திற்கொள்ளாது, மாகாண எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.
ஒக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; அபாய நிலை காணப்படுகிறது – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
Reviewed by Author
on
August 05, 2021
Rating:
Reviewed by Author
on
August 05, 2021
Rating:


No comments:
Post a Comment