யாழ். சந்நிதி அன்னதான மடத்துக்கு ‘சீல்’!
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தங்கியுள்ள யாசகர்களுக்கு பொதி செய்யப்பட்ட உணவை வழங்க மோகன் அன்னதான மடத்துக்கு அனுமதியளிக்கப் பட்டிருந்தது.
எனினும், நேற்று வெள்ளிக் கிழமை ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வந்ததுடன், மோகன் மடத்தில் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன் ரொனால்ட்
தலைமையில் சுகாதாரப் பிரிவினர், பொலிஸார் அங்கு சென்றனர்.
இதன் போது முகக்கவசம் அணியாமல், சுகாதார விதிகளைப் பேணாமல் பலர் கலந்து கொண்டிருந்தமை
அவதானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் மோகன் மண்டபம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை- 14 நாள்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்தில் தங்கியுள்ள யாசகர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பு வேறொரு மண்டபத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ். சந்நிதி அன்னதான மடத்துக்கு ‘சீல்’!
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
Reviewed by Author
on
August 07, 2021
Rating:


No comments:
Post a Comment