அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்றுக்குள்ளான 2 - 14 வயது வரையான சிறுவர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்கத் தீர்மானம்

கொரோனா தொற்றுக்குள்ளான சிறிதளவு நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற 2 வயது முதல் 14 வயது வரையான சிறுவர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து செல்வதைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா தொற்று தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குளான சிறுவர்களை வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கும் போது, சிறுவர்களை கவனித்துக்கொள்ள அவர்களுக்கு அருகில் பெரியவர் ​​ஒருவர் எந்த நேரமும் இருக்க வேண்டும் மற்றும் தொலைபேசி மூலம் சிகிச்சை பரிந் துரைக்கப்படுவதால் தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ள சிறுவர்களின் பொறுப்பாளர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வீட்டிலிருந்து எவ்வாறு சிகிச்சை வழங்குவது என்பது தொடர்பாக அறிந்து கொள்ள 1390 என்ற இலக்கத்தில் அழைக்கலாம் என்றும் நாட்பட்ட நோய்கள் அல்லது ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை கண்டிப்பாக வைத்தியசாலைக்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 150 சிறுவர்கள் அனுமதிக்கப்பட் டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளான 2 - 14 வயது வரையான சிறுவர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்கத் தீர்மானம் Reviewed by Author on August 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.