ஒரே நாளில் 200ஐக் கடந்த கொவிட் மரணங்கள்
நேற்றுமுன்தினம் 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் மரணித்த 209 பேரில் 108 ஆண்களும், 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதில் 31 ஆண்கள், 15 பெண்கள் என 46 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட வர்களாவர். 163 பேர் 60 வயதுக்கு மேற் பட்டவர்களாவர். இதில் 77 ஆண்களும், 86 பெண்களும் அடங்குகின்றனர்.
ஒரே நாளில் 200ஐக் கடந்த கொவிட் மரணங்கள்
Reviewed by Author
on
August 27, 2021
Rating:

No comments:
Post a Comment