அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சினோபாம் 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு இன்று திங்கட்கிழமை(9) முதல் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி மன்னார் பிராந்திய சேவைகள் பணிமனை,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை (9) முதல் வழங்கி வருகின்றனர். 

 மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தடுப்பீசி செலுத்தும் நடவடிகை இடம் பெற்று வருவதுடன் பேசாலை சென் மேரிஸ் கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது, மேலும் இன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை,மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன
                 





மன்னாரில் சினோபாம் 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு Reviewed by Author on August 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.