அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கிராம மட்ட கொவிட் சுகாதார மேம்பாட்டு குழுக்களிடம் பிரதேச செயலாளர் கோரிக்கை

நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்று நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் கொரோனா நிலைமைகளை கையாளவும் கிராம ரீதியாக உருவக்கப்பட்டுள்ள கொவிட் சுகாதார மேம்பாட்டு குழுவினரை அர்பணிப்புடன் செயற்படுமாறு மன்னார் பிரதேச செயளாலர் ம.பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார் மன்னார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோன தொற்று தொடர்பான நடவடிக்கைகளை முன் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட கொவிட் சுகாதார மேம்பாட்டு குழுவினருக்கான கலந்துரையாடல் மற்றும் அவர்களுக்கான சுகாதார பொருட்களை கையளிக்கும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்று நீடித்து வருகின்ற நிலையில் எமது பகுதிகளும் தற்போது அபாய நிலையில் உள்ளது.

 எனவே கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நடைமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் தற்போது வைத்தியசாலைகளில் வள பற்றாக்குறை காணப்படுகின்றது அனைவரையும் வைத்திய சாலையில் அனுமதிக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவே கிராம மட்டத்தில் செயற்படும் கொவிட் சுகாதார மேம்பாட்டு குழுக்கள் சரியான முறையில் அர்பணிப்புடன் செயற்படவேண்டும் நோய் நிலமை தொடர்பான சரியான தகவல்களை சேகரிக்க வேண்டும் அவை தொடர்பான விபரங்களை உடனடியாக கிராம அலுவலர் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்க வேண்டும் அதே நேரம் தனிமைப்படுத்தபட்ட குடும்பங்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்

 சில நேரங்களில் எமது நாட்டில் என்னும் அதிகளவான நெருக்கடிகள் ஏற்படலாம் நாடு மீண்டும் முடக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம் எனவே கிராம ரீதியாக இயங்கும் குழுக்கள் சிறப்பாகவும் அர்பணிப்புடனும் இயங்கினால் கொரோன நிலமையை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என அவர் தெரிவித்தார் அதே நேரம் கொவிட் சுகாதார மேம்பாட்டு குழுவினருக்கு தேவையான ஒரு தொகுதி சுகாதார பொருட்களை மன்னார் “வேல்ட் விசன்” அமைப்பின் உதவியுடன் மன்னார் வேல்ட் விசன் அமைப்பின் திட்ட முகாமையாளர், அனர்த முகாமைத்துவ உதவிப்பணிபாளர், மற்றும் மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருடன் இணைந்து கையளித்துள்ளார்







மன்னார் கிராம மட்ட கொவிட் சுகாதார மேம்பாட்டு குழுக்களிடம் பிரதேச செயலாளர் கோரிக்கை Reviewed by Author on August 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.