பாசையூரில் வீடொன்றினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட எழுவர் அரை மணி நேரத்தில் கைது
சம்பவம் தொடர்பில் கிடைத்த தவலின் அடிப்படை யில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத் தனர்.
இதனடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயதுக் கும் 27 வயதுக்கும் உட்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்ட னர்.
சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப் பட்டனர்.
பாசையூரில் வீடொன்றினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட எழுவர் அரை மணி நேரத்தில் கைது
Reviewed by Author
on
September 21, 2021
Rating:

No comments:
Post a Comment