அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி வழங்க நடவடிக்கை.

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே ஏனைய விடை யத்தை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் உரிய அதிகாரிகளுக்கு இன்று திங்கட்கிழமை (27) பணிப்புரை விடுத்தார்.

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி 250 ஏக்கர் காணப்படுகின்றது. இக்காணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் வட மாகாண காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிமலன், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் கே.அரவிந்தராஜ் உற்பட உரிய அதிகாரிகள் இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் உள்ள குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு விசாரனைகளை மேற்கொண்டனர். 

இதன் போது அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணத்தை பெற்றுக் கொண்டவர்கள் , தனி நபர்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் குறித்த பகுதியில் காணி துப்பரவு செய்திருந்த நிலையில் அவர்களின் துப்புரவு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே ஏனைய விடையத்தை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அதற்கு அமைவாக துப்பரவு செய்தவர்களின் பணிகள் நிறுத்தப்பட்டு 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிகமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் அபிவிருத்திக் குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.










மன்னார் இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி வழங்க நடவடிக்கை. Reviewed by Author on September 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.