ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 200 வறிய குடும்பங்களுக்கு தலா 2170 ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் பகிர்ந்து வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் ரவி கிருஷ்ணா, உதவிப் பிரதேச செயலாளர் பவதாரணி, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட அவுஸ்திரேலியாவில் வதியும் முகுந்தன் அவர்களின் நிதியுதவியில் இவ் உலருணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
ஈஸ்ட் லைட் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
Reviewed by Author
on
September 20, 2021
Rating:

No comments:
Post a Comment