அண்மைய செய்திகள்

recent
-

தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல்

'மனோலி' தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை கமாண்டன்ட் முகமது ஷா.நவாஸ், மற்றும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் கடலோரப் படை வீரர்கள், வன ஊழியர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஹோவர் கிராப்ட் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டு ரோந்து சென்றனர். 

 அப்போது மனோலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகு கைப்பற்ற கடலில் முயன்றனர். ஹோவர் கிராப்ட் விரைந்து வருவதை அறிந்த நாட்டுப்படகில் இருந்த 4 பேர் தப்பி ஓடினர். பதிவெண் இல்லா நாட்டுப்படகு, அதிலிருந்து கடல் அட்டை மூட்டைகளை மண்டபம் இந்திய கடலோரக் காவல் படை முகாம் கொண்டு வந்தனர். மூட்டைகளை பார்த்தபோது அதில் பதப்படுத்தப்படாத பச்சை கடல் அட்டைகள் ஆயிரத்து 500 கிலேர் இருந்தன. இக்கடல் அட்டை மூடைகளை மண்டபம் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

 அதேபோல் உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனப் பாதுகாப்பு படை, வன காவல் படை இணைந்து தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்த 35 கிலோ கடல் அட்டை மற்றும் 200 கிராம் கடல் குதிரைகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தேவி பட்டினத்தைச் சேர்ந்த முகமது யாசர் அலி என தெரிந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்


.
தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் படகுடன் பறிமுதல் Reviewed by Author on September 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.