மன்னாரில் உண்மை செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு மத குருவால் அச்சுறுத்தல்
மடு கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் லோரன்ஸ் மதகுரு குழுவினருக்கும் முரண்பாடு தோற்றம் பெற்ற நிலையில் குறித்த செய்தியை ஊடகவியளாலர் அறிக்கையிட்டதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மடு தேவலயத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த மத குருவிடம் கோரியுள்ளார் ஆனாலும் குறித்த மத குரு விளக்கம் கொடுக்க மறுத்த நிலையில் தன்னால் சேகரிக்கப்பட தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை அறிக்கையிட்டுள்ளார்
செய்தி வெளியாகிய நிலையில் லோரன்ஸ் என்ற பிரச்சினையுடன் சம்ம்தப்பட்ட மத குரு தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியளாலரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன் தான் யார் என்பதை காட்டுவேண் எனவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்
தொலைபேசியில் அச்சுறுத்தியதுடன் நிறுத்தாமல் இன்று இரவு குறித்த ஊடகவியளாலர் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை சில அடியாட்களுடன் சுற்றிவளைத்ததுடன் வீட்டின் மீது கற்றகளை வீசியுள்ளனர் விடயம் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் ஓடி ஒளிந்துள்ளனர்
மத குருவாக இருந்து மன்னார் மறை மாவட்ட ஆயரின் அனுமதி இன்றி மத குரு என்ற நிலையை மறந்து ஏழை விவசாயிகளின் காணிக்காக இவ்வாறு அச்சுறுத்தல் செய்ற்பாட்டில் ஈடுபட்ட மத குரு மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட ஊடகவியளாலரால் மடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
மன்னாரில் உண்மை செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளருக்கு மத குருவால் அச்சுறுத்தல்
Reviewed by Author
on
September 26, 2021
Rating:
Reviewed by Author
on
September 26, 2021
Rating:









No comments:
Post a Comment