அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு கல்வி வலய மாணவன் 7A சித்தி

2020-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ள நிலையில், பல மாணவர்கள் பல்வேறு சிக்கல்கள், தடங்கல்களுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றி வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில் மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 

 அந்த வகையில் பெரியபண்டிவிரிச்சானை சேர்ந்த நிகால் நிர்மலராஜா - சகாயநாயகி தம்பதிகளின் புதல்வனான செல்வன். மைக்கல் ஆஞ்சலோ அவர்கள் எட்டு பாடங்களில் விஷேட சித்தியும் (A), ஒரு பாடத்தில் திறமை சித்தியும் (C) பெற்று பெரியபண்டிவிரிச்சான் கிராமத்திற்கும், பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்திற்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார்.

 தவிர குறித்த மாணவன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 173 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார். மேலும் பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவியான செல்வி. ஆன்இமயா ஏழு பாடங்களில் விஷேட சித்தியும் (A), ஒரு பாடத்தில் அதி திறமை சித்தியும் (B ), மற்றொரு பாடத்தில் சாதாரண சித்தி (S) - யையும் பெற்றுள்ளார். மற்றொரு மாணவியான செல்வி செல்வி J.ஜெரோஷா லெம்பேட் ஆறு பாடங்களில் விஷேட சித்தியும் (A), இரண்டு பாடங்களில் திறமை சித்தியும் (C) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் மடு கல்வி வலய மாணவன் 7A சித்தி Reviewed by Author on September 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.