மன்னார் உயிலங்குளத்தில் வைத்து புலனாய்வாளர்களால் இளைஞர் கைது
மன்னார் உயிலங்குள பிரதான கடைத்தொகுதியில் வைத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது
இத்தவிடயம் தொடர்ப்பாக மேலும் தெரியவருவது
நேற்று (02/10/2021) மாலை 6 மணியளவில் நாகராசா ஹரிகரன் என்பவரை புலனாய்வாளர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரனைக்கு உயிலங்குள பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்களால் அருட்தந்தை மில்ட்டன் தேவராஜ் அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர் உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று அவரினை விடுவித்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர் நாகராசா ஹரிகரன் , வங்காலை மன்/புனித ஆனால் மத்திய மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்சிவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

No comments:
Post a Comment