கடும் எதிர்ப்புக்களை அடுத்து யொஹானியுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கினார் ஹாரிஸ் ஜெயராஜ்!
இது இலங்கை, இந்தியாவில் பிரபலமானது. இலட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் இதனைப் பார்வையிட்டனர். இந்தப் பாடல் "பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதற்காக" தனது தந்தையை "ஹீரோ" என புகழும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் சென்றிருந்த யொஹானியை சந்தித்த ஹாரிஸ் ஜெயராஜ் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ருவிட்டரில் பதிவிட்டு அவரைப் புகழ்ந்திருந்தார்.
இதனைடுத்து உடனடியாக அவரது இந்த ருவிட்டர் பதிவு தொடர்பில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பின.
இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள், போர்க்குற்றங்கள் உள்ளிட்டவற்றுடன் யொஹானியின் தந்தைக்கு இருந்த பங்குகளைச் சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்தே இலங்கைப் பாடகி யொஹானி த சில்வாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ருவிட்டரில் இருந்து பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார்.
இதற்கிடையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருந்த பாடகி யொஹானி த சில்வா நேற்றிரவு இலங்கை திரும்பினார்.
விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனக்கு அதிகளவான எதிர்ப்பார்ப்புகள் இருப்பதாக கூறினார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடும் எதிர்ப்புக்களை அடுத்து யொஹானியுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கினார் ஹாரிஸ் ஜெயராஜ்!
Reviewed by Author
on
October 13, 2021
Rating:

No comments:
Post a Comment