மன்னார் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்
மேலும் பெற்றோருடன் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தள்ளனர்.
அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலை சீருடையுடனும்,சில மாணவர்கள் சாதாரண ஆடையுடனும் பாடசாலைக்கு சமூகமளித்து உள்ளனர்.
பாடசாலைக்கு செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது.
மேலும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் பாடசாலைகளுக்கு முன் விசேட கடமையினை முன்னெடுத்து வருகின்றனர்.
நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் கடந்த வியாழக்கிழமை (21) ஆம் திகதி முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அன் அடிப்படையில் 2 ஆம் கட்டமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (25) தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment