ஆசிரியர் - அதிபர் பேச்சுவார்த்தை நிறைவு; நாளை சங்கங்கள் கூடி இறுதித் தீர்மானம்
நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவையில், அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, 3 கட்டங்களில் 3 வரவு செலவுத் திட்டங்களில் சம்பள உயர்வை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இன்று (12) பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சம்பள அதிகரிப்பை 2 கட்டங்களில் வழங்க அரசாங்கம் இணங்குவதாக தெரிவித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 2022 ஜனவரியில் முதல் கட்ட சம்பள அதிகரிப்பும், 2023 இல் இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள், நாளையதினம் ஏனைய சங்கங்கங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆசிரியர் - அதிபர் பேச்சுவார்த்தை நிறைவு; நாளை சங்கங்கள் கூடி இறுதித் தீர்மானம்
Reviewed by Author
on
October 12, 2021
Rating:

No comments:
Post a Comment