அண்மைய செய்திகள்

recent
-

நோர்வேயில் பல்பொருள் அங்காடிக்குள் அம்பு வில்லுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் - ஐவர் பலி

அம்புவில்லுகளை பயன்படுத்தி நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நோர்வேயில்ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒஸ்லோவிலிருந்து வடகிழக்கில்உள்ள கொங்ஸ்பேர்க் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 37 வயது டென்மார்க் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அவர் தனியாக செயற்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் இது பயங்கரவாத சம்பவமா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர். கொங்ஸ்பேர்க் மேற்கு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குழப்பநிலை ஏற்பட்டுள்ளதையும் மக்கள்அலறுவதையும் நான் அவதானித்தேன் பெண் ஒருவர் ஒளிந்து கொள்ள முயல்வதையும் நபர் ஒருவர் கையில் அம்பு வில்லுடன் காணப்படுவதை பார்த்தேன் என சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் ரீவி2ற்க்கு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக ஓடுவதை பார்த்தேன் பெண் ஒருவர்கையில் குழந்தையுடன் ஓடினார் என அவர் தெரிவித்துள்ளார். 

சந்தேக நபர் ஏனைய ஆயுதங்களை பயன்படுத்தினாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அந்த நபர் பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேறி நகரத்திற்குள் நுழைந்தார் அதிகாரிகள் நகரத்தை சுற்றிவளைத்ததுடன் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே வரவேண்;டாம் என கேட்டுக்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் அந்த நபர் கைது செய்யப்ட்டுள்ளார்


.
நோர்வேயில் பல்பொருள் அங்காடிக்குள் அம்பு வில்லுடன் நுழைந்து தாக்குதலை மேற்கொண்ட நபர் - ஐவர் பலி Reviewed by Author on October 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.