மகனை கட்டியணைத்த படி உயிரிழந்த தாய் : நிலச்சரிவில் தொட்டிலில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை - கலங்க வைக்கும் சம்பவம்!!
மீட்கப்பட்ட மூன்று குழந்தைகளும் கட்டியணைத்தவாறு சடலங்களாக மீட்கப்பட்ட காட்சி பலரையும் கலங்கச் செய்து உள்ளது. மீட்புப் பணிக்கு சிறிது தூரத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் தாய் தனது 10 வயது மகனை கட்டி அணைத்தவாறு சடலமாக மீட்கப்பட்டதுடன், தொட்டிலில் இறந்த நிலையில் குழந்தை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சியாத் - பவுசியா தம்பதியினர் கஞ்சிரப்பள்ளி பகுதியில் வசித்து வந்த நிலையில் உறவினர் திருமணத்திற்காக பவுசியா இடுக்கியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தது தெரியவந்தது.
இந்த நிலச்சரிவில் பவுசியா, அம்னா(வயது 7), அஃப்சான் (வயது , அஹியன் ( 4) மற்றும் அமீன் (10)ஆகியோர் பலியாகியுள்ளனர். அம்னா மற்றும் அமீன் இருவரும் சியாத் - பவுசியா குழந்தைகள், அஃப்சன் மற்றும் அஹியன் இருவரும் பவுசியாவின் சகோதரரின் பிள்ளைகள். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில பவுசியா கணவர் சியாத் அழுது கொண்டிருந்தது இதயத்தை கனக்க செய்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகனை கட்டியணைத்த படி உயிரிழந்த தாய் : நிலச்சரிவில் தொட்டிலில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை - கலங்க வைக்கும் சம்பவம்!!
Reviewed by Author
on
October 18, 2021
Rating:

No comments:
Post a Comment