அண்மைய செய்திகள்

recent
-

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு?


ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது

 தமிழர்கள் செயலணியில் உள்வாங்கப்படாதது குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஏனைய பலரும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார் என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார் இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு? Reviewed by Author on October 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.