அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொலிஸ் நிலைய சம்பவம் டிப்பர் சாரதிக்கு 22 திகதி வரை விளக்கமறியல்

மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி இன்றையதினம் மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கஜஸ் பெல்டானோ முன்னிலையில் கொலை புரிய எத்தனித்தமை (Attempt to Murder ) குற்றத்திற்காக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த டிப்பர் சாரதி அடையாள அணிவகுப்புக்கு எனவும் மேலதிக விசாணைகளுக்காகவும் வருகின்ற 22 திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார். 

 மன்னார் தோட்டக்காட்டு பகுதியில் இடம் பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளைஞர்கள் மீது டிப்பர் வாகனம் மோதிய சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்றைய தினமே குறித்த சாரதி மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குறித்த சாரதி இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் குறித்த சாரதி நபர் ஒருவரின் தூண்டுதலின் கீழ் குறித்த இளைஞர்கள் மீது கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் ஏற்கனவே குறித்த இளைஞர்களுடன் தூண்டுதல் மேற்கொண்டவர்களுக்கு இடையில் முரண்பாடு காணப்பட்டதாகவும் எனவே குறித்த விபத்து திட்டமிட்டு இடம் பெற்றுள்ளதாகவும் மன்றில் தெரிவித்திருந்தனர். 

 அதே நேரம் சாரதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த சாரதி வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதோடு காயப்பட்ட இளைஞர்களுக்கும் குறித்த சாரதிக்கும் எவ்விதமான முரண்பாடுகள் இல்லை எனவும் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம் பெற்றதாகவும் திருகோண மலையை சேர்ந்த குறித்த டிப்பர் சாரதி இவ் விபத்தை திட்டமிட்டு நிகழ்த்தவில்லை எனவும் வாகனத்தை செலுத்திச் சென்றவர் இவர்தான் என்றும் ஆகவே அடையாள அணிவகுப்பு அவசியமற்றது என்றும் தனது வாதத்தை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் இரு தரப்பினரின் வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் குறித்த டிப்பர் சாரைதியை அடையாள அணிவகுப்பிற்காகவும் மேலதிக விசாரணைக்காகவும் வருகின்ற 22 திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





மன்னாரில் பொலிஸ் நிலைய சம்பவம் டிப்பர் சாரதிக்கு 22 திகதி வரை விளக்கமறியல் Reviewed by Author on October 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.