மன்னாரில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.
வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் 11 ஆம் கட்டை துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் என்.யோகராஜா,முருங்கன் கட்டுக்கரை குளம் நீர் பாசன பொறியியலாளர் பி.அருள் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-தற்போது கட்டுக்கரை குளத்தில் 9 அடி நீர் காணப்படுகிறது.
மேலும் கட்டுக்கரை குளத்திற்கு நீர்வரத்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் வினியோகமானது இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
மன்னாரில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.
Reviewed by Author
on
October 26, 2021
Rating:

No comments:
Post a Comment