அண்மைய செய்திகள்

recent
-

காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரசாயன உரம்!

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் காணப்படும் எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 பதுளை, பண்டாரவளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயன்படுத்திய உரம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஒப்புக்கொண் டுள்ளதாக ‘வீக்கெண்ட் சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காய்கறிகளின் விலை வேகமாக உயரும் என விவசாய அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது கிடைக்கும் உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரசாயன உரம்! Reviewed by Author on November 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.